கூகுள் மெப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் மூழ்கிய வாலிபர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 12, 2020

கூகுள் மெப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் மூழ்கிய வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கூகுள் மெப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருகி விட்ட நிலையில் ‘கூகுள் மெப்’ (கூகுள் வழிகாட்டி) செயலி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த செயலி மூலம் வழி தெரியாத ஊர்களில் கூட எளிதில் பயணம் செய்ய முடிகிறது.

வெளிநாடுகளை பொறுத்தவரையில் கூகுள் மெப் இல்லாமல் வெளியே செல்லவே மாட்டார்கள். அந்த அளவுக்கு கூகுள் மெப்பின் தேவை அத்தியாவசியமாகி இருக்கிறது. அதே சமயம் கூகுள் மெப்பை நம்பி சென்று, பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கூகுள் மெப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மிசிசிப்பி மாகாணம் மினியாப்பொலிஸ் நகரில் வாலிபர் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்துக்கு கூகுள் மெப் காட்டிய வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள பாலத்தை கடப்பதற்கு பதிலாக, ஆற்றில் இறங்கி சென்றால் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாக போகலாம் என்பது போல் கூகுள் மெப் காட்டி உள்ளது. அந்த ஆறு முழுவதும் பனியால் உறைந்து இருந்தது.

எனவே கூகுள் மெப் காட்டியபடியே ஆற்றின் பனிப்படலத்தின் மீது நடந்து கரையை கடக்கலாம் என்று முடிவு செய்து, நடக்க தொடங்கினார். அவர் ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, பனிப்படலம் உடைந்து, வாலிபர் ஆற்றுக்குள் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad