தற்கொலை செய்ய தாயிடம் தூக்குக் கயிறு கேட்டு கதறும் சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

தற்கொலை செய்ய தாயிடம் தூக்குக் கயிறு கேட்டு கதறும் சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ

குள்ளமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்ள தூக்குக் கயிறு தரும்படி கேட்டு மன்றாடும் வீடியோ வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கி உள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். அவலமான தோற்றம் காரணமாக குவாடனை, பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்து போனான்.

இது குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுத குவாடன், தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்ள தூக்குக் கயிறு அல்லது கத்தி போன்ற ஏதாவது ஆயுதம் தரும்படி கேட்டு மன்றாடினான்.

மகனின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து உடைந்துபோன யர்ராகா, மற்றவர்களை கேலி-கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தன் மகன் குவாடன் தற்கொலை செய்வதாக கூறி கதறி அழுத காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.

வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அதை பார்த்தனர். அதனை தொடர்ந்து, யர்ராகாவுக்கும், குவாடனுக்கும் நம்பிக்கையூட்டும் ஆதரவு கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டனர்.

அத்தோடு, பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் அந்த வீடியோவை இணையவாசிகள் டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, குவாடனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர். 

ஹக் ஜேக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் குவார்டனுக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டும் இன்றி தேசிய ரக்பி போட்டியின் போது குவாடனை விளையாட்டு மைதானத்துக்கு வரவழைத்து கௌரவப்படுத்த விளையாட்டு வீரர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment