மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 22, 2020

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிறுப்பு வசந்த புரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இன்று (22) காலை 9 மணியளவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை பொலிஸ் நிலைய விசேட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் துள்ளுக்குடியிறுப்பு வசந்தபுரம் பகுதியில் 205 கிலோ 44 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்தோடு, பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரனைகளின் பின்னார் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad