நீதிமன்ற உத்தரவு விடுக்கப்பட்டுள்ள போதிலும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதினால், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மாலபேயிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று நேற்று (21) நீதிமன்ற அறிவித்தல் அறிவிப்பை வீட்டு கதவில் ஒட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயற்படுத்தியதால், அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவில் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்ததன் பின்னர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு அறிவிப்பொன்றை அனுப்பியிருந்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஒகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (20) பிடியாணை அறிவித்தலை ஒட்டுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment