சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment