உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.
தனது கருணையுள்ளம் கொண்ட தீர்ப்புகளால் உலகெங்கிலும் பல கோடி மக்களின் மனங்களை வென்ற நீதிபதி ஃபிராங்க் கேப்ரியோ, தனது 88ஆவது வயதில் காலமானார்.
“Caught in Providence” என்ற நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற இவர், சிறு குற்றங்கள் செய்தவர்கள், ஏழைகள் மற்றும் வயதானவர்களிடம் காட்டிய மனிதாபிமானம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, “உலகின் மிகச் சிறந்த நீதிபதி” என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.
இதனால், மக்களிடையே மிகவும் பிரபலமான நீதிபதி ஃபிராங், கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நீதிபதி ஃபிராங் கேப்ரியோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
நீதிபதி ஃபிராங் கேப்ரியோவின் இரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பி.பி.சி
No comments:
Post a Comment