கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் பொதுமக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் திட்டம் இன்று (10) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கோறளைப்பற்று தெற்கு கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சிபாரிசுக்கு எதிராகவும், தங்களுக்கு வழங்க வேண்டிய காணியை முழுமையாக வழங்க வேண்டி கோரியும் இந்த கையொப்பம் சேகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்குடா சமூக நலப்பேரவை ஏற்பாடு செய்துள்ள இவ் கையொப்பம் சேகரிக்கும் திட்டத்தில் நியாயமான முறையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொதுமக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள், எனப்பலரும் கலந்துகொண்டு தங்களுடைய கையொப்பங்களை இட்டுள்ளனர்.
No comments:
Post a Comment