காசா பகுதியில் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று (02) அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், போரிடலை தற்காலிகமாக நிறுத்தி, இஸ்ரேல் கைதிகளையும் பலஸ்தீன கைதிகளையும் பரிமாறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், “இது இறுதி யோசனை. ஹமாஸ் இப்போது ஏற்கவில்லை என்றால், நிலைமை மேலும் மோசமாகும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு அடுத்த வாரம் வோஷிங்டனுக்கு செல்லும் முன்னர், அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகளான மார்க்கோ ரூபியோ, ஜேடி வாஞ்ஸ் உள்ளிட்டோர் இஸ்ரேல் அமைச்சர் ரான் டேர்மருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச்சில் நிறைவுக் கு வந்த நிலையில், புதிய ஒப்பந்தம் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது.
இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸ் தமது பதிலை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment