கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (11) அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான சந்தேகநபரான தேடப்பட்டு வரும் பிம்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே, அவரது இரண்டாவது மனைவி என தெரிவிக்கப்படும் பெண் மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்லும்போது மலேசிய பாதுகாப்புப் படையினரால் கடந்த 09 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை பொலிஸார் இந்த செய்தியை பின்னர் உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்கள் அதிகாரிகள் குழுவை அந்நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரும் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள் அதிகாரிகள் நாளை நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment