தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சமந்த ரணசிங்க எம்.பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 99 ஆவது உறுப்புரையின் (13) ஆம் உப உறுப்புரையின் (ஆ) உட்பந்தியின் கீழ் வெற்றிடமான குறித்த பதவியை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கேகாலை தேர்தல் மாவட்டத்தின் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 62 ஆம் பிரிவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினரொருவராக தெரிவு செய்யப்பட்ட ஹபு ஆரச்சிகே கோசல நுவன் ஜயவீர இறப்பெய்தியதன் காரணமாக, அரசியமைப்பின் உறுப்புரை 99 (13) (ஆ) ஆம் உப உறுப்புரையின் பிரகாரம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (2) ஆம் பிரிவின் கீழ், மேற்கூறப்பட்ட தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக ரத்நாயக்க முதியன்சேலாகே சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க அறிவித்துள்ளார.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பற்ற 38 வயதான சமந்த ரணசிங்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment