குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக : அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 10, 2025

குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக : அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

பலஸ்தீன் காஸாவில் இடம்­பெற்­று­வரும் மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­குதல் நிறுத்­தப்­பட குனூத்துன் நாஸி­லாவில் பிரார்த்­திப்போம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது குறித்து உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வா குழுவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்­ள­தா­வது,

பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்­க­ளாக தொடர்ந்து நடாத்­தப்­பட்டு வரும் கொடூ­ர­மான தாக்­கு­தலில், அக்­டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்­பாவி முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்தும், 118,958 பேர் காய­முற்றும் உள்­ளனர் என ஊட­கங்கள் வாயி­லாக அறி­யக்­கி­டைக்­கின்­றன.

எனவே, அப்­ப­கு­தியில் இடம் பெற்­று­வரும் மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்குதல் நிறுத்­தப்­ப­டவும் அமைதி, சமா­தானம் மற்றும் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வ­தற்கும் அனைத்து மஸ்­ஜித்­க­ளிலும் பஜ்ர் தொழு­கையில் ஓதக்­கூ­டிய குனூத்­து­டைய துஆவை ஐவேளைத் தொழு­கை­களில் மஃமூம்­க­ளுக்கு சடை­வில்­லாமல் ஒரு மாத­கா­லத்­திற்கு ஓதி­ வ­ரு­மாறு மஸ்­ஜி­து­டைய இமாம்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்­கின்­றது.

அத்­துடன் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்­திஃபார் போன்ற நல்­ல­மல்­களைச் செய்­வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment