பிள்ளையான் கைது! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 8, 2025

பிள்ளையான் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08) மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நபர் ஒருவரை கடத்தியமை மற்றும் அவரை காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, அத்திணைக்களத்தின் அதிகாரிகளால் இக்கைது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது அவர் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பதோடு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment