பிரதமர் மோடிக்கு இலங்கையின் மித்ர விபூஷன் விருது : இந்த கௌரவம் இந்திய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உயர் மரியாதை - News View

About Us

About Us

Breaking

Saturday, April 5, 2025

பிரதமர் மோடிக்கு இலங்கையின் மித்ர விபூஷன் விருது : இந்த கௌரவம் இந்திய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உயர் மரியாதை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருது, இந்திய - இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (05) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உரையாற்றிய மோடி, ஜனாதிபதியால் இன்றையதினம் ‘இலங்கை மித்ர விபூஷன்’ என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைக்கப் பெற்ற உயர் மரியாதையாகும்.

அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது.

இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என இந்திய பிரதமர் மோடி இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment