வேட்புமனு நிராகரிப்பிற்கு எதிரான மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, April 4, 2025

வேட்புமனு நிராகரிப்பிற்கு எதிரான மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரின் ஒப்புதலுடன், எஸ். துரைராஜா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டபோது, சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை எழுப்பி, இந்த மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.

அதன்படி, தொடர்புடைய மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரினார்.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்து, சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்பகட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.

அதன்படி, விசாரணைக்காக அழைப்பாணை பிறப்பிக்காமல், குறித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment