சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியத்திற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரியவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு நேற்றையதினம் (10) பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானம் மற்றும் அரச துறையின் சிறந்த மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பொருளாதாரத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நிலையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பில் இங்கு பிரதமர் கருத்து தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் தொடர்பிலும் இதன் போது விடயங்களை பிரதமர் முன் வைத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திரவும் மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment