சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இன்று (11) காலை நாட்டிற்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.00 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் நிகவரெடிய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று நானேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக டேன் பிரியசாத்துக்கு எதிராக நிகவரெடிய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக, கல்கமுவ நீதவான் நீதிமன்றம் டேன் பிரியசாத்துக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையையும், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவையும் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்து அங்கு பதுங்கியிருந்த நிலையில், நாடு திரும்பும்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட டேன் பிரசாத், அரகல போராட்டத்தின்போது பாரிய வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment