டயானா கமகேவுக்கு எதிராக பிடியாணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

டயானா கமகேவுக்கு எதிராக பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) பிடியாணை பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (06) காலை பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியற்ற விசாவினூடாக இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் (CID) 07 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment