'ரோஹிங்கியாக்கள் என்போர் யாவர்?' நாளை கொழும்பில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

'ரோஹிங்கியாக்கள் என்போர் யாவர்?' நாளை கொழும்பில் கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கைக்கு சமீபத்தில் வந்த மியான்மரைச் சேர்ந்த நாடற்ற அகதிகளான ரோஹிங்கியாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கிற நாடற்ற ரோஹிங்கியாக்கள் சம்பந்தமான வீடியோ சாட்சியங்களைக் கொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நாளை (27) திங்கட்கிழமை பிற்பகல் 3.00-5.00 மணி வரை கொழும்பு 10, இல 281, டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூகம் சமய நடுநிலையத்தில் (CSR), இடம்பெறவுள்ளது.

ரோஹிங்கியாக்கள் அவர்கள் யார்? அவர்கள் ஏன் இலங்கையில் இருக்கிறார்கள் ? நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் வகையில் இக்கலந்துரையாடலானது சமூகம் சமய நடுநிலையம் (CSR) மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் எவரும் கலந்து கொள்ளலாம் எனவும் உங்களின் வருகையை கீழ்வரும் (எஸ்.எம்.எஸ். அல்லது வட்ஸ்அப் செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தும் படியும் கேட்கப்பட்டுள்ளனர். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com

No comments:

Post a Comment