அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்கமைய கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு - பிரதமர் ஹரினி அமரசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்கமைய கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு - பிரதமர் ஹரினி அமரசூரிய

2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திற்கமைய ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீளாய்வு செய்து நிறைவு செய்யவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, ”உண்மையில் நாம் இந்த தருணத்தில் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் வேலைகள் தொடர்பில் மீளாய்வு செய்கின்றோம். 

பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த வேலைத்திட்டப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாம் இந்த நேரத்தில் அனைத்து பாடசாலைகளையும் மீளாய்வு செய்து, எமது திட்டத்திற்கமைய அனைத்து பிள்ளைகளுக்கும் மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்குள் செல்லக்கூடிய வகையிலான ஆரம்ப நிலை பாடசாலையும், அவ்வாறான பாடசாலைகளை இணைத்துக் கொண்டு நடத்திச் செல்லக்கூடிய அனைத்து வசதிகளையும் கொண்ட மேல் நிலை பாடசாலையொன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இதனை நாம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை. தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுடன் தொடர்புடைய பாடசாலைகளை தெரிவு செய்து முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கே எதிர்பார்த்துள்ளதாக” பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment