நாடெங்கும் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

நாடெங்கும் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்

அபாயகரமான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக உடன் அமுலுக்குவரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஆண்டில் முதல் 16 நாட்களில் 5 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் குறித்த சம்பவங்கள் மூலம் பறிக்கப்படும் மனித உயிர்களைக் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுப் பாதுகாப்பு விடயத்தில் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் தனிப்பட்ட விரோதம் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள்தான் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

எவ்வாறாயினும், போதைப் பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பது உறுதியான விடயமாகும்.

மன்னார் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் சம்பந்தமான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தினை தடுப்பதற்கு முடியாது போனமை தொடர்பில் பொலிஸாரை மையப்படுத்திய விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment