நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் பதிவு செய்யப்படாத போலி வைத்தியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்படாமல் வைத்தியர்கள் என்ற பெயரில் செயற்படும் வைத்தியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், அவ்வாறானவர்கள் தொடர்பாக தகவல்கள் இருந்தால் அதனை சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்துக்கோ அல்லது வேறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ பொதுமக்கள் அறிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக இயங்கும் போலி வைத்தியர்களை இனங்காண்பதற்காகச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக சமூகத்திலிருந்து அறிய முடிகின்றது. எனினும், அந்தளவு பெருந்தொகையான வைத்தியர்கள் உள்ளார்களா என்பதை நம்ப முடியாமலும் உள்ளது.

எனினும் குறிப்பிடத்தக்க அளவு போலி வைத்தியர்கள் நாட்டில் இயங்குகின்றார்கள் என்பதை குறிப்பிட முடியும்.

நாட்டில் பல்வேறு மருத்துவ முறைமைகள் காணப்படுகின்ற நிலையில், அனைத்து வைத்தியர்களும் இலங்கை மருத்துவ சபையில் தம்மை பதிவு செய்வது அவசியமாகும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும்போது சில வைத்தியர்கள் தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment