காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டோருக்கு டென்னிஸ் வீரர் நிதி - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டோருக்கு டென்னிஸ் வீரர் நிதி

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் நிதி வழங்கியுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவருக்கு 82 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71 இலட்சம்) பரிசு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அந்த பரிசுத் தொகையை, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்கு டெய்லர் பிரிட்ஸ் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் டெய்லர் பிரிட்ஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments:

Post a Comment