அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் Clean Srilanka - 2025 திட்டத்துடன் இணைந்தாக இலங்கை பொலிஸாரால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல் இது என குறிப்பிட்டு நபரொருவரால் பதிவு செய்யப்பட்ட போலியான குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஒரு பிரிவைக் குறிப்பிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட மேலும் சில விடயங்களை வலியுறுத்துவதாகவும், அவ்வாறு செய்யாதவர்கள் மீது 15.01.2025 இற்குப் பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்த குரல் பதிவு போலியான குரல் பதிவு எனவும், அவ்வாறான குரல் பதிவு இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை என்றும் இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த குரல் பதிவுவை வெளியிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
No comments:
Post a Comment