மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் - முன்னாள் பிரதி சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் - முன்னாள் பிரதி சபாநாயகர்

மரணமடைந்த பின்னரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததமைக்காக மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் போற்றப்பட வேண்டிய நபர் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமிய புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போலவே மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இப்படியான ஒரு தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பறிக்கப்பட்டு, அவர் நாட்டுக்காக ஆற்றிய பணிகளைப் புறக்கணித்து குறைமதிப்பிற்கு உட்படுத்தி, சாதாரண குடிமகனாக அவரை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment