போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (20) இரவு அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் கல்வல சந்திப் பகுதியில் இரவு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் 183, 344 ஆகிய பிரிவின் கீழ் நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே அர்ச்சுனாவை கைது செய்து, சட்டப் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும், விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை, பெப்ரவரி 3ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment