சதொச ஊடாக விற்பனையாகும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 8, 2024

சதொச ஊடாக விற்பனையாகும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09) முதல் 2 இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந் தோப்புக் காணிகளிலுள்ள தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சதொச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்கப்படும் எனவும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment