தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2024

தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி

உலக கிரிக்கெட் டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

அதேநேரத்தில் அவுஸ்திரேலிய அணி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இதன் மூலம், தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி, இலங்கையை 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் தென் ஆபிரிக்க அணி 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் அவுஸ்திரேலிய அணி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி 61.11 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்திலும், 59.26 சதவீத வெற்றிகளுடன் தென் ஆபிரிக்க அணி 2ஆவது இடத்திலும், 57.69 சதவீத வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 3ஆவது இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment