ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கே.டி.ஆர். ஒல்காவிற்கு கையளித்தார்.
இதேவேளை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்டு சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சராக நாமல் சுதர்சன கடந்த 21ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment