திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு! - News View

About Us

About Us

Breaking

Saturday, November 9, 2024

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் மேலும் பலனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரிபோஷ நிறுவனத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் வலுவான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது சிறுவர்களின் பாேஷாக்கு தேவைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment