எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் கருணாரத்ன பரணவிதானகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2024

எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் கருணாரத்ன பரணவிதானகே

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கருணாரத்ன பரணவிதானகே ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தலதா அதுகோரல பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கருணாரத்ன பரணவிதானகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாரத்ன பரணவிதானகே எட்டாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருந்ததுடன், அந்தக் காலப்பகுதியில் வெகுஜன ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி, உள்ளூராட்சி மன்றம் போன்ற அமைச்சுக்களின் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment