ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவக்கு எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கான ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
இன்றையதினம் (21) பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய அவர், ஐ.ம.ச. தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிலிருந்து எழுந்து சென்று எதிரணி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு கடந்த சனிக்கிழமை (17) மாத்தறை அக்குரெஸ்ஸ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மூன்றாவது பேரணியில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
கருணாதாச கொடிதுவக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் 114,319 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment