மின்சார சபை கடந்த அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபா வருமானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 21, 2024

மின்சார சபை கடந்த அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபா வருமானம்

இலங்கை மின்சார சபையானது இந்த வருடத்தின் கடந்த காலாண்டில் 34.53 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் வரி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு அப்பால் சுத்த இலாபமாக இந்த தொகை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 84. 67 பில்லியன் ரூபாவை சுத்த இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கிணங்க இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் மேற்படி சபை 119.20 பில்லியன் ரூபா இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இது 11. 920 கோடி ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மின்சார சபை பெற்றுக் கொண்டுள்ள 34. 53 பில்லியன் ரூபா இலாபமானது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிவடைந்துள்ள காலாண்டுடன் ஒப்பிடுகையில் 67. 2 வீத அதிகரிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment