இலங்கை முதலீட்டு சபையுடன் ஹட்சிசன் ரெலிகொமினிகேஷன்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட் மேலதிக உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது.
ஹட்சிசன் ரெலிகொமி னிகேஷன்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைமை அதிகாரி ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.
ஹட்சிசன் ரெலிகொமினி கேஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் சுமார் இரண்டு தசாப்தத்துக்கு மேலாக இயங்கிவருவதுடன், தனது வலையமைப்பை உறுதி செய்யும் வகையில் எடிசலாட் லங்கா (பிரைவட்) லிமிடெட்டுடன் ஒன்றிணைந்துள்ளது.
இலங்கையில் 4G சேவைகளை வழங்கும் மூன்றாவது சேவை வழங்குநராக Hutch இயங்கும். இது தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், முதற் கட்டமுதலீடு 115 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என திருகுமார் நடராசா தெரிவித்தார்.
No comments:
Post a Comment