சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காகு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்காக பிரதான திட்டமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆலோசனை சேவை நிறுவனமொன்றை நியமித்து கொள்வதற்கும், அவ்வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை மேற்கொள்ள வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை நியமிப்பதற்கும் மற்றும் அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக இளைஞர் விவகார, வேலைத்திட்ட முகாமைத்து மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment