பாராளுமன்ற வளாகத்தில் கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர் - வைரலாகும் வீடியோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

பாராளுமன்ற வளாகத்தில் கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர் - வைரலாகும் வீடியோ

பாராளுமன்ற வளாகத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே தான் கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மிகவும் எளிமையானவர். அவரது நடவடிக்கைகளால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார். 

இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட மார்க் ரூடேவின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மார்க் ரூடே பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் போது தெரியாமல் அவர் கையில் இருந்த காபி கீழே விழுந்தது. 
அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடமிருந்து மாபை வாங்கி ரூடே சுத்தம் செய்கிறார். இதை கண்ட ஊழியர்கள் அவரை பாராட்டினர். இதுகுறித்து வீடியோவை கண்ட பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதேபோல் ரூடே சென்ற ஆண்டு நெதர்லாந்து மன்னரை சந்திக்க சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் எளிமையான செயல்கள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment