கடற்கரைகளிலிருந்து மணல், சிப்பிகளை திருடிய சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

கடற்கரைகளிலிருந்து மணல், சிப்பிகளை திருடிய சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம்

கடற்கரைகளிலிருந்து 100 கிலோ கிராம் மணல், சிப்பிகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தாலியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள இத்தாலியின் சார்டினியா தீவில் இந்த சம்பவம் நடந்தது.

சுற்றுலாப் பயணிகள் 41 பேர் தீவிலிருந்து 100 கிலோ கிராம் எடையுள்ள மணல், சிப்பிகள், கற்கள் போன்றவற்றை எடுக்க முயன்றனர். சிலர் அந்தப் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவை தீவின் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்கு 3,600 டொலர் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் கடற்கரையில் கொண்டுபோய் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சார்டினியா தீவு,பிரபலமான சுற்றுலாத் தலம். அது அழகிய, நீண்ட கடற்கரைகளுக்குப் பெயர்பெற்றது.

No comments:

Post a Comment