தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிடியாணை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 13, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிடியாணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளது.

நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக துசித ஹல்லொலுவ பெயரிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதையடுத்து, நீதவான் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

No comments:

Post a Comment