ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘தளபதி கச்சேரி’ பாடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 9, 2025

ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘தளபதி கச்சேரி’ பாடல்

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தளபதி கச்சேரி’ பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு நேற்று (08) மாலை வெளியிட்டது. 

வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இப்பாடல் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. பலரும் #ThalapathyKacheri என்ற ஹாஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

இப்பாடல் யூடியூபில் 47 இலட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. இப்பாடலை அறிவு எழுதியுள்ளார். அனிருத், விஜய், அறிவு மூவரும் இப்பாடலை பாடியுள்ளனர்.

அதேசமயம் ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் விஜய் நடனம், பாடல் வரிகள் என அனைத்தையும் குறிப்பிட்டு பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

அதே வேளையில், விஜய் – பூஜா ஹெக்டே – மமிதா பைஜு ஆகியோர் நடனமாடும் காட்சிகளை வைத்து, இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.

‘பகவந்த் கேசரி’ படத்தின் க்ளைமேக் காட்சியில் பாலையா – காஜல் அகர்வால் – ஸ்ரீலீலா ஆகியோர் நடனமாடும் பாடல் ஒன்று இடம்பெறும். அதே பாடல் தான் ‘தளபதி கச்சேரி’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 

மேலும், ‘பகவந்த் கேசரி’ படத்தில் ஸ்ரீலீலா கழுத்தை ஒட்டி பாசி ஒன்றை அணிந்திருப்பார். இதிலும், அதே மாதிரி மமிதா பைஜு அணிந்துள்ளார். இதனை வைத்து இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக்கே ‘ஜனநாயகன்’ என உறுதி செய்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோன்று அப்பாடலுக்காக போடப்பட்ட அரங்கில், விஜய்யின் பழைய படங்களின் பெயர்கள் கடைகள் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர். 

மேலும், ‘தளபதி கச்சேரி’ பாடலின் இறுதியில் அனிருத் பேசியதோடு பாடல் முடிந்துவிடும். அதனை படத்திற்காக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். 

அதில் விஜய் படங்களில் இருந்து ஹிட்டடித்த பாடல்களின் இசையினை வைத்து ஒரு நடனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அது விஜய் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் என்கிறது படக்குழு.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment