பட்ஜெட்டின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று - News View

About Us

About Us

Breaking

Friday, November 14, 2025

பட்ஜெட்டின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமானதோடு, வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து, நாளை (15) முதல் 17 நாட்கள் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தை ஆரம்பமாவதோடு, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment