நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காத ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு இடைக்காலத் தடை! - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காத ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு இடைக்காலத் தடை!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரின்றி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (12) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்ற வேண்டுமெனவும் அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

No comments:

Post a Comment