தகரத்தில் அடைக்கப்பட்ட மீனுக்கு உபச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
டூ(யு)னா, மெக்கரல், ஜெக் மெக்கரல் ஆகிய தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் வகைகளுக்கு இவ்வாறு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மீறும் வகையில், அதனை விட அதிகமான விலையில் விற்பனை செய்தல், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை குற்றமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய
டூ(யு)னா ரக 425 கிராம் எடையுள்ள டின் மீன் 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெக்கரல் ரக 155 கிராம் எடையுள்ள டின் மீன் 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெக்கரல் ரக 425 கிராம் எடையுள்ள டின் மீன் 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெக் மெக்கரல் 425 கிராம் எடையுள்ள டின் மீன் மீன் 560 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment