மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 10, 2024

மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிக்க தீர்மானம்

பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல மற்றும் மாணவர் உதவித் தொகைகளை அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 17 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் மாணவர் உதவித் தொகை தவணைக் கட்டணங்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை. 

குறித்த தவணைக் கட்டணத்தை திருத்தம் செய்வதற்கான தேவையை கல்வி அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை கவனத்தில் எடுத்திருந்தது. 

குறித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, மஹாபொல புலமைப்பரிசில் தவணைக் கட்டணத்தை 7,500/= ரூபா வரைக்கும், மாணவர் உதவித் தொகை தவணைக் கட்டணத்தை 6,500/= ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

No comments:

Post a Comment