ஒற்றுமையில்லையென கூறுவோருக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் : எங்களைத் தேடி வர வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

ஒற்றுமையில்லையென கூறுவோருக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் : எங்களைத் தேடி வர வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம். இனி எமது கட்டமைப்புடன்தான் பேச வேண்டும். அடுத்த கட்ட அரசியல் நகர்வாக இருக்கும் இந்தக் கட்டமைப்பை உருவாக்கக்கூடாது என்று பலர் முயற்சிகள் எடுத்தார்கள் எங்களுக்குள்ளேயும் பலர் சவால் விட்டார்கள் எதிராக பிரச்சாரம் செய்வோம் என்றார்கள் எனினும் நாம் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ளோம் இனியும் இதைக் குழப்புவதற்கு பலர் இருக்கின்றார்கள்.

பல சிக்கல்களும் உருவாகும் இவை அனைத்தையும் எதிர்த்து போராடித்தான் முன்னேறிச் செல்ல வேண்டும். ஏன் பொது வேட்பாளர் தேவை என்பதற்கு பல காரணங்கள் உண்டு யுத்தத்திற்கு பிற்பாடு அரசாங்கம் எங்களை அழைத்து கலந்துரையாடுவார்கள் ஆனால் எதுவும் நடக்காது இப்போது நாங்கள் ஒரு நிலையை தோற்றுவித்திருக்கின்றோம் நீங்கள் யாராவது பேசவிரும்பினால் வரலாம் நாங்கள் கூற வேண்டிய அவசியமில்லை.

நாங்கள் இப்போது தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு செய்தியைச் செல்லுகின்றோம் யாராக இருந்தாலும் எம்மிடம் பேச வேண்டியிருந்தால் எங்களை நோக்கி வருவார்கள்.

நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே தென் பகுதியில் ஒரு அச்ச நிலை ஏற்பட்டது. இவர்கள் ஒன்றாகப்போகின்றார்கள் என்று இந்தக் காலத்தில் முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்கள் எங்களைத் தேடி வீடுவீடாக வந்தார்கள் கடந்த காலத்தில் கொழும்பிலே யாருடனோ பேசி முடிவுகளை அறிவிப்பார்கள் ஆனால் இன்று தேடி வருகின்றார்கள் என்றால் இவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போகின்றார்கள் அதற்கு முன்பாக இவர்களுடன் பேசி ஆதரவைப் பெற வேண்டும் என்றுதான் வந்தார்கள்.

ஆகவே அவர்கள் எங்களைத் தேடி வர வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இனி தனிப்பட்ட எவரையும் சந்தித்துப் பேசுவதில்லை. தற்போது தமிழ்த் தேசியத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இனிமேல் இவர்களுடன் பேசித்தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை உருவாக்கியுள்ளோம்.

ஆகவே இதுவரை காலமும் ஒற்றுமை இல்லை எனக்கூறியவர்களுக்கு மிகக்காத்திரமான பதிலை வழங்கியுள்ளோம்.

இந்தக் கட்டமைப்புக்குள் வராத ஏனைய கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியும் இதற்குள் வர வேண்டும் இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

பொது வேட்பாளர் விடையம் என்பது எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கி நகரவுள்ளது இதில் காத்திரமான வெற்றியைப் பெறுவோம் என்றால் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பார்கள் என்றால் அந்தச் செய்தி சிங்களத் தரப்பு, இராஜதந்திரத் தரப்பு, சர்வதேச தரப்பு ஆகியவற்றுக்கு பலமான செய்தியைச் செல்லும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒரே குரலில் பேசுகின்றார்கள் அந்தக் குரலை செவிசாய்க்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment