எரிவாயு விலையில் மாற்றமா ? அறிவித்துள்ள லிட்ரோ - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2024

எரிவாயு விலையில் மாற்றமா ? அறிவித்துள்ள லிட்ரோ

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மார்ச் மாதத்திற்கான எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, நேற்று (29) நள்ளிரவு முதல் குறித்த விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

ஜனவரியில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வைத் தொடர்ந்து, இப்போது லிட்ரோ கேஸ் விலைகள் பின்வரும் விகிதங்களில் உள்ளன:

12.5kg விலை : ரூ. 4,250
5kg விலை : ரூ.1,707
2.3kg விலை : ரூ.795

No comments:

Post a Comment