பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 16, 2024

பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 3ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் A/L விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை இவ்வருடம் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் எடுத்த தீர்மானம் காரணமாக, பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான வினாத்தாள் இரண்டாம் பாகம் வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து அதனை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் வினாத்தாளின் முதலாம் பாகத்தை இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 1ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 முதல் 11.40 வரை மீண்டும் நடைபெற உள்ளது.

முதல் பாகம் அதே நாள் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment