நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஜனாஸாவாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 12, 2024

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயதுடைய அதீக் எனும் இளைஞன் இன்று (13) சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

நேற்று சுழியோடிகள் கடும் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படவில்லை.

இன்றையதினம் இளைஞன் சுழியோடிகளின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரண விசாரணைகளின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment