தைப் பொங்கல் தினத்தன்று கைதிகளை இனிப்புகளுடன் பார்வையிட அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, January 13, 2024

தைப் பொங்கல் தினத்தன்று கைதிகளை இனிப்புகளுடன் பார்வையிட அனுமதி

தைப் பொங்கல் தினத்தன்று இந்துமத தமிழ்க் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கும் வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய இந்து மத தமிழ்க் கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வரும்போது, ​​ஒருவருக்கு மட்டும் போதுமான உணவுப் பொட்டலங்கள் மற்றும் இனிப்புகளை கொண்டு வருமாறு சிறைச்சாலை ஆணையாளர் (புலனாய்வு மற்றும் நடவடிக்கை) சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் முறையான சுகாதார, பாதுகாப்பு முறைகளின் கீழ் கைதிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment