இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) முன்பாக உள்ள வீதியை இன்று (09) தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, டொரிங்டன் சந்தியில் உள்ள மைட்லாண்ட் வீதியிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில் பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை சீலரதன தேரரும் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அவரை நடுவழியில் தடுத்தாலும், பின்னர் கடிதம் கொடுக்க அவருக்கு வாய்ப்பளித்தனர்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குவது தொடர்பான விவாதம் இன்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment