நட்புறவான தொழில் முனைவோரை ஊக்குவித்து, அந்நிய செலாவணியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் - மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 11, 2023

நட்புறவான தொழில் முனைவோரை ஊக்குவித்து, அந்நிய செலாவணியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் - மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் ஒரு நம்பிக்கையான திசையில் திருப்புவதற்கு விஞ்ஞான ரீதியான பொருளாதார வேலைத்திட்டம் சமூகமயப்படுத்தப்பட வேண்டும். தவறான கருத்துக்களின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்குப் பதிலாக இன்னும் உகந்த தீர்வுகள் விவாதிக்கப்பட வேண்டும். இளைஞர் சமூகம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதன் மூலம் நட்புறவான தொழில் முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் அந்நிய செலாவணியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை அரசியல் வரலாற்றில் புதுமையின் முதல் அடையாளமாக விளங்கும் மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் கொழும்பு, பார்க் அவென்யூ பகுதியில் புதன்கிழமை (11) கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார மற்றும் ஏனைய செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, இந்த தினம் விசேட தினமாகும். இலங்கை இளைஞர் சமூகம் இலங்கை பெண்கள் மற்றும் அனைத்து இலங்கை மக்களுக்கும் வலுவூட்டும் நோக்கத்தில் மகிழ்ச்சியான ஒரு தொழில்முனைவோர் அரசை உருவாக்குவதற்கான நோக்கத்திற்காக மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த நாடு தொழில் முனைவோருக்கு புகலிடமாக மாற வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் எமது நாட்டில் தொடர்ந்தும் ஏற்பட்ட சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளுக்குப் பின்னால் இருந்த தேசிய மூலோபாய அணுகுமுறைகளின் பற்றாக்குறையை நிரப்பி உயர் அரசியல் கல்வியறிவு கொண்ட இலங்கை சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்த பங்களிப்பை கொண்ட அரசியல் வெளியை உருவாக்கவே நாம் எதிர்பார்க்கிறோம்.

அரசியல் நலனுக்காக இன மதக் கோடுகளாக பிரிந்து கிடக்கும் தாய்நாட்டின் அனைத்துப் பிரிவுகளையும் நாம் கடந்து செல்ல வேண்டும். ஒரே நாட்டில் ஒரே இதயத்துடிப்பில் அனைவரும் ஒன்றாக நிற்கும் உணர்வை உணரக்கூடிய தேசிய சித்தாந்தம் இருக்க வேண்டும்.

அந்த உணர்வின் ஊடாக நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பரஸ்பர அவநம்பிக்கையை போக்குவதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை மவ்பிம ஜனதா கட்சி முன்னெத்து செல்ல தயாராக இருக்கிறது.

காலத்தில் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் ஒரு நம்பிக்கையான திசையில் திருப்புவதற்கு விஞ்ஞான ரீதியான பொருளாதார வேலைத்திட்டம் சமூகமயப்படுப்பட வேண்டும். எனவே தவறான கருத்துக்களின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்குப் பதிலாக இன்னும் உகந்த தீர்வுகள் விவாதிக்கப்பட வேண்டும்.

இளைஞர் சமூகம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதன் மூலம் நட்புறவான தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் அந்நிய செலாவணியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment