துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொள்கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மில்லியன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இவை, கேஸ் அடுப்புகளை இறக்குமதி செய்யும் போர்வையில் நாட்டுக்குள் தருவிக்கப்பட்டிருந்தன.
இதன் பெறுமதி 300 மில்லியன் ரூபாவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்கள துறைமுக கட்டுப்பாட்டு பிரிவுக்கு புலனாய்வு தகவல்களை ஆராய்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலே, இந்த சிக்கரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
இக்கொள்கலன் போலி முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் கொள்கலனில் சமையல் எரிவாயு அடுப்புகள் உள்ளதாக பொருட்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்வதேச சுங்கக் கடத்தலை தடுப்பதே துறைமுக நிர்வாகப் பிரிவின் முக்கிய பணியாகும்.
இது தொடர்பாக சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் யூ கே அசோக்க ரஞ்சித் மற்றும் சிரேஷ்ட பிரதி சுங்க பணிப்பாளர் சாந்தனி ஆகியோரின் ஆலோசனைகமைய பிரதி சுங்க பணிப்பாளர் எச். எம். எஸ்.ராஜகுரு, என்.எஸ். குமாநாயக்க மற்றும் உதவி சுங்க அதிகாரிகளான கே. எம். பி. என். விஜயபால, டி. ஏ. ஜயகொடி, எஸ். நிதிபன், எச்.எம். என் ஐ என் பண்டார மற்றும் பி.ஆர் எபிடவெல ஆகியோரால் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
No comments:
Post a Comment